
நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த செந்தூல் ஸ்ரீ நாகம்மாள் கோவிலை அகற்றும்படி மேம்பாட்டு நிறுவனம் நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புற்றுடன் அருள் பாலித்து கொண்டிருக்கும் இந்த நாகம்மாள் ஆலயம் ரயில்வேயில் பணிபுரிந்த இந்தியர்கள் காலங்காலமாக வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கோவிலை அகற்றும்படி மேம்பாட்டு நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஆலயச் செயலாளர் ஹரிஹரன் லெட்சுமணன் தெரிவித்தார்.
இந்த ஆலயத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் கோவில் நிர்வாகம் களம் இறங்கி இருப்பதாக குறிப்பிட்ட ஹரிஹரின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் வி. பிரபாகரன் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவித்தார்

