
டிசம்பர் முதல் தேதி இந்த நாட்டின் சாமானிய இந்திய மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சி எனும் ஜோதி ஏற்றப்பட்ட திகதி.
டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியாருக்கு பிறகு மலேசிய திருநாட்டில் ஏழைகளின் விடிவெள்ளி நாயகனான அண்ணண் டான்ஸ்ரீ எம் ஜி பண்டிதன் புறப்பட்ட வீர திருநாளே இந்த டிசம்பர் முதல் நாள்.
தோட்டம் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழும் சாமானிய மக்களும் இந்த நாட்டிலே அரசியலில் மின்ன வேண்டும் கல்வியில் மிழற வேண்டும் பாட்டாளிகளின் பிள்ளைகளும் பட்டதாரிகளாக ஆக வேண்டும் என்று நோக்கத்துடன் புரட்சி புயலாக நமது புரட்சித் தலைவர் எம் ஜி பண்டிதன் புறப்பட்ட தினமே டிசம்பர் முதல் நாள்.
உழைக்கும் வர்க்கத்தை நேர்படுத்த ஏழைகளுக்கு என்ன ஒரு கட்சி பாட்டாளிகளுக்கு என்ன ஒரு இயக்கம் என்று ஐபிஎப் கட்சி தொடங்கப்பட்ட நாளே டிசம்பர் முதல் நாள்.
இன்று மலேசியா அரசியல் வானில் தனக்கென்ன தனி முத்திரையுடன் பவனிக்கும் ஐபிஎப் கட்சிக்கு 34 வயது இந்த 34 வருட கால போராட்டத்தில் ஐபிஎப் கட்சிக்காக உழைத்து நம்முடன் வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எங்களின் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
நான் சென்று வருகிறேன் நீங்கள் வென்று வாருங்கள் என்று தனது இறுதி காலத்தில் வீர முழக்கமிட்டு சென்ற கட்சியின் தோற்றுனார் புரட்சித் தலைவர் அவர்களின் வார்த்தைக்கு ஏற்ப தான் ஸ்ரீ எம் ஜி பண்டிதனுக்கு பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்ற புவான் ஸ்ரீ ஜெய ஸ்ரீ பண்டிதன் அவருக்கு பிறகு தலைமை பொறுப்பையற்ற டத்தோ சம்பந்தன் அவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சின்னத்தில் ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் அவர்கள் போட்டியிட்டது இந்த சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஐபிஎப் கட்சியின் போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல சமுதாய போராட்டம் ஆகையால் இந்த நாட்டில் எந்த ஒரு அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தாலும் ஐபிஎப் கட்சியின் சமுதாயப் போராட்டம் தொடரும்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
நாளை நமதே! இந்த நாடும் நமதே!
Hon.Dr.ச.குமரேசன்
ஐபிஎப் கட்சியின் தேசிய தகவல் பிரிவு தலைவர் / ஐபிஎப் பினாங்கு மாநில தலைவர்

