பந்திங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிதி திரட்டும் விருந்து- பாப்பா ராய்டு சிறப்பு வருகை!

பந்திங், டிச. 3- பந்திங் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிதி திரட்டும் விருந்து நிகழ்வு ஆலய கலாச்சார மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆலயத்தின் 20ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக திருப்பணிக்கு நிதி திரட்டும் நோக்கில் ஆலய நிர்வாகத்தினர் இந்த விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆலயத் தலைவர் குமார் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்து நிகழ்வில் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி, கோல லங்காட் மஇகா தொகுதி தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன், கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள், நன்கொடையாளர்கள், பொது மக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணியை மேற்காள்வதற்கு தேவையான நிதியைத் திரட்டுவதற்காக இந்த சிறப்பான விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்தினருக்கு பாப்பராய்டு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles