அமானா இக்தியார் திட்டத்தின் கீழ் 3,263 இந்திய பெண்கள் நன்மை அடைந்தனர்!டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர் டிச 5-
இந்நாட்டில் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை 3,263 இந்திய பெண்கள் அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ இரமணன் மக்களவையில் இதனை தெரிவித்தார்.

இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக அமைச்சின் கீழ் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி உதவி வருகிறது.

இந்த திட்டங்களின் வாயிலாக இந்திய பெண்களும் பயன் அடைந்துள்ளனர்.

அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 3,263 இந்திய பெண்கள் பயன் பெற்றுள்ளனர்.அவர்களுக்காக கிட்டத்தட்ட 30.34 மில்லியன் ரிங்கிட் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தெக்குன் ஸ்பூபி கோஸ் பிக் திட்டத்தின் வாயிலாக 77 இந்திய பெண்கள் பயனடைந்துள்ளனர்.இவர்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்இ கோர்ப்பின் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 20 நிறுவங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் கிராண்ட் வழங்கப்பட்டுள்ளது.இதில் 6 நிறுவனங்கள் இந்திய பெண் வர்த்தகர்களுக்கு சொந்தமானதாகும்.

இதை தவிர்த்து பேங்க் ரக்யாட்டின் பிரிவ்-ஐ 430 இந்திய வர்த்தகர்கள் பயன் பெற்றுள்ளனர்.இதில் 145 பேர் இந்திய பெண் வர்த்தகர்களாவர். அவர்களுக்கு 8.14 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles