டிசம்பர் 8ஆம் தேதி மலாயா பல்கலைக் கழகத்தில்சித்த காப்பியம் நூல் வெளியீட்டு விழா!

கோலாலம்பூர், டிச.6-
சித்தர் பெருமக்களின் வழிகாட்டுதலின்படி மனித வாழ்க்கையை வளமாக்கும் பொருட்டு சித்த காப்பியம் எனும் அரும் நூல், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வில் துறை ஏற்பாட்டில் இனிதே வெளியீடு காணவிருக்கிறது.

இந்த அரிய நூல், ஈப்போ பிரம்மஸ்ரீ குண்டலினி சிவயோக ஆலயத் தோற்றுநரும், வழிதோன்றல் குருவுமாகிய, பிரம்ம ஞான சித்தர் சுவாமி அவர்களால் பல ஆண்டுகளாக
ஆய்வுகள் செய்யப்பட்டு, தொன்மையான சித்தர் பாடல்கள் எளிய தமிழில் மக்களுக்குப் புரியும் வண்ணம் தொகுத்து எழுதப்பட்டுள்ளன.

சித்த பெருமக்களின் அநுபூதியால் இந்த அற்புத ஆன்மீக நூல், இறுதி வடிவம் பெற்று கீழ்க்கண்டவாறு வெளியீடு காணவிருக்கிறது:-

திகதி: டிசம்பர் 8 2024 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: பிற்பகல் 2.00 முதல் மாலை 4.30 வரை
இடம் : டேவான் கூலியா F, இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்.

இந்நூலை மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறை தலைவரும் சித்தரியல் தகைமையாளருமான முனைவர் ஜி.சிவபாலன் அவர்கள் ஆய்வுரை செய்கிறார்.

மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் தோற்றுநர், சுவாமி மகேந்திர குருக்கள் இந்நூலின் மகத்துவத்தை வாழ்த்துரையாக வழங்கவிருக்கிறார்.

இந்த நவீன யுகத்தில் ஆன்மீகத் தெளிவோடு, வளங்களுடன் வாழவும் இந்த சித்த காப்பியம் எனும் சித்தர் வாழ்வியல் அரும் நூலை அறிவுபெட்டகமாகப் பெறவும் பொதுமக்களை அன்புடன் அழைக்கிறோம்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 0165434809 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles