
ஈப்போ, டிச.5: இம்மாதம் 11ல், ஈப்போவில் உலக மகா கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழா மலேசிய மண்ணின் முன்னாள் அமைச்சர் நற்பணிச் செல்வர் டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் இளங்கோ தியாராஜன் ஆகிய சான்றோர்கள் கலந்துக்கொள்வதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் மணி இரா.மாணிக்கம் கூறினார்
இந்நிகழ்வு ஈப்போ கொனாலி ரோடு, பேராக் இலங்கையர் கலாச்சார மண்டபத்தில் வரும் 11.12.2024( புதன்கிழமை) மாலை மணி 5.00 க்கு தொடங்கவுள்ளது.
இந்நிகழ்வினை மங்களகரமாக குத்து விளக்கேற்றி வைப்பவர், மலேசிய உயர்நீதிமன்ற முதன்மை மேன்மைமிகு டான்ஸ்ரீ டத்தோ நளினி பத்மநாதன். இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் மூவர் சமூக பணிகளுக்காக சிறப்பிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஆசிரியர் வழிகாட்டி ஜே ஆர் நடராஜா, காலஞ்சென்ற மூத்த தலைமையாசிரியர் திலகம் பி.எஸ்.கோவிந்தன் மற்றும் மூத்த தமிழ் ஆசிரியை பழம் பெரும் எழுத்தாளர் கமலாட்சி ஆறுமுகம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வானது 142 வது பாரதியார் பிறந்த நாள் விழாவாகவும், மலேசியாவின் முத்தமிழ் விழாவாகவும் இம்மாதம் 10 ல் கோலாலம்பூரில், 11 ல் ஈப்போவில், 12 ல் சுங்கை பட்டாணியில்,13 ல் பினாங்கில் மற்றும் 14 ல் சிலாங்கூரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வு முற்றிலும் இலவசம் என்பதோடு பொதுமக்கள் அனைவரும் இந்திகழ்வில் கலந்துக்கொள்ள ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு அழைக்கின்றனர். மேலும் கூடுதல் தகவலுக்கு ஆசிரியர் இரா.மாணிக்கத்தை தொடர்புக்கொள்ளலாம்( 013-5014906)

