காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் டிச 6-
வாயில்லாத ஜீவன்களை கொடூரமாக அடித்துக் கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் விலங்குகள் நலச் சட்டம் 255 (சட்டம் 777) 29 ஆவது பிரிவு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என டிஎஸ்கே அமைப்பின் தலைவர் டத்தோ சிவகுமார் கண்ணா அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படுகிறது.
இந்தச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் செய்ய பயப்படுவார்கள்.
சட்டம் பலவீனமாக இருப்பதால் ஈவு இரக்கம் இல்லாதவர்கள் வாய் இல்லாத ஜீவன்களை கொடூரமாக அடித்துக் கொள்கிறார்கள் என்றார் அவர்.
அண்மையில் பண்டார் பாரு சுங்கை பூலோவில் ஒரு நாயும் அதன் ஆறு குட்டிகளும் அடித்துக் கொல்லப்பட்டன.
இந்தச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் சொன்னார்.