

காஜாங், டிச 7-
இளம் வயதினர் மத்தியில் Vaping எனப்படும் மின்னியல் சிகரெட் ஆபத்துகள் மற்றும் தீங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றது.
இன்று டிசம்பர் 7 ஆம் தேதி PPP Hulu Langat தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 26 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் பதின்ம வயதுடையவர்கள்.
வேப்பிங் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பேச்சு இவர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
இதனால் ஏற்படும் ஆபத்துகள், உடல்நலம், நடத்தை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் அதன் தாக்கம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
துவான் கேசவன் மற்றும் பயிற்சியாளர் யோகா ஆகிய இரு பேச்சாளர்களால் இந்த அமர்வு வெற்றிகரமாக வழிநடத்தப்பட்டது.
மின்னியல் சிகரெட் என்றால் என்ன? பதின்ம வயதினரிடையே அதன் பரவலான தாக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
வேப்பிங் ஏன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது?
சகாக்களின் அழுத்தத்தின் தாக்கம், சமூக ஊடகப் போக்குகள், கவர்ச்சிகரமான சுவைகள் மற்றும் வேப்பிங் பாதிப்பில்லாதது பற்றிய தவறான கருத்துக்கள் ஆகியவற்றின் மீது நேரடி விவாதங்கள் நடத்தப்பட்டது.
இளைஞர்கள் இதை எப்படி எதிர்க்க முடியும்:.
சுயமரியாதையைக் கட்டியெழுப்புதல், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை வளர்த்தல் மற்றும் சகாக்களின் அழுத்தத்தை திறம்பட எதிர்ப்பது போன்ற நடைமுறை உத்திகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
உடல் நலத்தை வெகுவாக பாதிக்க செய்யும் இந்த மின்னியல் சிகரெட்டில் இருந்து பாதுகாத்து கொள்வது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு அனைவருக்கும் பெரும் பயனாக அமைந்துள்ளது.

