கூட்டு பேச்சுவார்த்தையின் வழி இந்திய இறக்குமதி அரிசியின் விலை குறைப்பு- பிரதமர்!

பட்டர்வொர்த், டிச.8-
கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியா சென்றிருந்தபோது அந்நாட்டு அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் சுமையை குறைப்பதில், குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அவர்கள் (இந்தியா) அரிசியை மலிவான விலையில் விற்க ஒப்புக்கொண்டனர். இந்த நடவடிக்கை சமூகத்தின் மீதான சுமையை குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கம்போங் மஸ்ஜித் தீமாவில் மடாணி மலிவு விற்பனையைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் கூறினார்.

மலிவு விற்பனைத் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க இருக்க முடியும்.

இதன் வழி சந்தை விலையை குறைப்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles