சொந்த அரங்கில் மென்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி!

லண்டன் டிச 8-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தது.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் கிளப் நோட்டிங்ஹாம் போரஸ் கிளப்பை சந்தித்து விளையாடிது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் கிளப்பிடம் தோல்வி கண்டது.

புதிய நிர்வாகி தலைமையில் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ச்சியாக தோல்வி கண்டு வருவது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுவரை நடந்த 15 ஆட்டத்தில் 5 இல் வெற்றி, 4 இல் டிரா, 6 இல் தோல்வி கண்டு 19 புள்ளிகளுடன் 15 ஆவது இடத்தில் உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் கிளப்பிடம் டிரா கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles