ஆறு மாநிலங்களில் வெள்ளம் தணிகிறது- நிவாரண மையங்களின் எண்ணிக்கையும் குறைகிறது!

கோலாலம்பூர் டிச. 8- நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களில் வெள்ளம்
நிலைமை சீரடைந்து வருகிறது.

வெள்ள நிவாரண மையங்களில்
தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கையும் நேற்று இரவுடன் ஒப்பிடுகையில்
இன்று காலை குறைந்துள்ளது.

வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான கிளந்தானில்
வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி
அங்கு இன்னும் செயல்பட்டு வரும் 18 நிவாரண மையங்களில் 6,269 பேர்
தங்கியுள்ளனர்.

கெடா மாநிலத்தில் நேற்றிரவு 642 குடும்பங்களைச் சேர்ந்த 2,131 பேராக
இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 566
குடும்பங்களைச் சேர்ந்த 1,865 பேராக குறைந்துள்ளது.

ஜோகூர் மாநிலத்திலும் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. இதன்
எதிரொலியாக சிகாமாட், கம்போங் பாலாய் பாடோங்கில் உள்ள ஒரு
துயர் துடைப்பு மையம் நேற்று மூடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி
அம்மாநிலத்தில் 521 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்
நாடியுள்ளனர்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles