காசா முழுவதும் உணவுப் பஞ்சம் பன்மடங்கு அதிகரிப்பு: சப்பாத்தி மாவு வாங்க கடைகளை முற்றுகையிடும் நூற்றுக் கணக்கான மக்கள்!

காசா, டிச 12-
நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களுக்கு இஸ்ரேல் ராணுவம் தடை விதித்துள்ளதால் காசா முழுவதும் உணவு பஞ்சம் மிக கடுமையாக அதிகரித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் அளித்த உணவு பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகள் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதி மறுத்துள்ளது.

இதனால் சர்வதேச அமைப்புகள் உணவு பொருள் விநியோகிப்பதை நிறுத்தி விட்டதால் பாலஸ்தீன மக்களின் முக்கிய உணவு ஆதாரமான சப்பாத்தி மாவுக்கு காசா முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் மாவு இருப்பு கரைந்து விட்டதால் சப்பாத்தி விற்பனை செய்யும் கடைகளை ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிடுகின்றனர்.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles