ஈப்போவில் மகா கவி பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் விழா

ஈப்போ, நவ 12-
உலகம் போற்றும் மகா கவி சுப்பிரமணிய பாரதியாரின் புகழ் தொடர ந்து நிலை்நிறுத்தி வருவதுடன் அவரின் பாடல்கள் உலகில் பல்வேறு இடங்களில் ஒலித்துக்கொண்டிருப்பது குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ எஸ். சுப்பிரமணியம் புகழாரம் சூட்டினா்.

தமிழ் நாட்டில் பிறந்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவராவார். துடிப்புக்கும் எழுச்சிக்கும் பாரதியாரின் பாடல்கள் இன்றும் தேவையாகிறது.

142 ஆண்டுகள் ஆகியும் பாரதியார் இன்னமும் உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

ஈப்போவில் ஆசிரியர் மணி இரா. மாணிக்கம் ஏற்பாட்டில் நடைபபெற்ற உலக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா நிகழ் டான்ஸ்ரீ எஸ். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

அவர் மேலும் ஆற்றிய உரையில் , இங்கு ஆண்டு் தோறும் இந்த நிகழ்வை ஏற்றி் நடத்தி வரும் இரா. மாணிக்கத்திற்கு பாராட்டுகளை கூறிக்கொண்டார்.

இங்குள்ள கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை காண அதிகமான மக்கள் வந்திருந்தனர் .

இந்த நிகழ்வு சென்னை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக தமிழ் சங்கம் , தேசிய நில நிதி கூட்டுறவுச. சங்கம் துன் வீ.. தி. சம்பந்தன் சேவை மையம் ,பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சங்கங்களின் ஆதரவுடன் நடைபெற்றது.

இதில் விழாவில் தமிழுக்கு தொண்டாற்றிய முன்னாள் தலைமையாசிரியர் ஜே ஆர் நடராஜா, நாடறிந்த மூத்த எழுத்தாளர் கமாலாட்சி ஆறுமுகம் காலஞ்சென்ற தலைமையாசிரியர் பி.எஸ்.கோவிந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles