
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் டிச 14-
தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழா நேற்று மாஸ்ஷா பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தேசம் ஊடகத்தின் உரிமையாளர் குணாளன் மணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விருந்தளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் சிறந்த ஆன்லைன் ஊடகவியலாளர் விருது தமிழ் லென்ஸ் இணையத்தளத்தின் நிருபர் காளிதாசன் இளங்கோவனுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களிடம் இருந்து காளிதாசன் இந்த விருதை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் முதல் நிலை உதவித் தலைவராகவும் காளிதாசன் இளங்கோவன் வலம் வருகிறார்.
துடிப்பு மற்றும் ஆற்றல்மிக்க ஊடகவியலாளராக விளங்கும் காளிதாசன் அவர்களுக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் முத்தமிழ் மன்னன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

