
செர்டாங், டிச 2-
ஏழை எளிய மக்களின் உரிமைக்குரலாக விளங்கும் ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு நாளை டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பாங்கி அவனியூ மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று கட்சியின் தேசிய செயலாளர் மோகன் தெரிவித்தார்.
ஐபிஎப் கட்சியின் இந்த 32ஆவது தேசிய பேராளர் மாநாட்டை துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
இந்த பேராளர் மாநாட்டில் ஆயிரம் பேராளர்கள் கலந்து கலந்து கொள்கிறார்கள்.
தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த 1990ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களால் ஐபிஎப் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டில் ஏழை எளிய இந்தியர்களுக்காக ஐபிஎப் கட்சி உருவாக்கப்பட்டது.
பல போராட்டங்கள் சவால்களுக்கு மத்தியில்
கடந்த கடந்த 34 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஐபிஎப் கட்சி தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

