சிரியா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 80 சதவீத ராணுவ நிலைகள் அழிப்பு!

டமாஸ்கஸ்: டிச 15-
முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத் வெளியேற்றத்துக்கு பின், சிரியா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .

இஸ்ரேல், அந்நாட்டு 80 சதவீத ராணுவ நிலைகளை அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும், 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது.

ஹெச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ஆம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின.

தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டு அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத், பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார்.

அவர் குடும்பத்துடன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அதிபர் இல்லாத சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த நாட்டில் உள்ள அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் 400க்கும் மேற்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles