

பாங்கி, டிச 15-
ஜபிஎப் கட்சிக்கு மிக விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தெரிவித்தார்.
ஐபிஎப் கட்சியின் போராட்டம் நேற்று இன்று அளவு.
கடந்த 34 ஆண்டுகளாக ஐபிஎப் கட்சி இயங்கி வருகிறது.
பல போராட்டங்களையும் சவால்களை சமாளித்து ஐபிஎப் கட்சி இன்னமும் தனித்துவம் வாய்ந்த ஒரு கட்சியாக விளங்கி வருகிறது.
தேசிய முன்னணியில் ஐபிஎப் கட்சி இணைந்து கொள்ளப்பட வேண்டும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி எங்களின் கோரிக்கையை கண்டிப்பாக பரிசீலிப்பார் என்று பெரிதும் நம்புகிறோம்.
மற்ற தோழமை கட்சிகளுடன் ஒப்பிடுகையில் ஐபிஎப் கட்சிக்கு தனி மகாத்துவம உள்ளது.
காலம் கடந்தாலும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எக்காரணத்தைக் கொண்டும் ஐபிஎப் தேசிய முன்னணியை விட்டு விலாகாது என்று அவர் சொன்னார்.

