16 ஆவது பொதுத்தேர்தலில் ஜபிஎப் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!

பாங்கி, டிச 15-
வரும் 16 ஆவது பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜபிஎப் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஜபிஎப் கட்சியின் தேசிய செயலாளர் மோகன் கோரிக்கை முன் வைத்தார்.

கடந்த 15 ஆவது பொதுத்தேர்தலில் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு தேசிய முன்னணி வாய்ப்பு வழங்கியது.

அந்த வகையில் வரும் பொதுத்தேர்தலில் ஜபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று பாங்கி அவென்யூ மண்டபத்தில் ஜபிஎப் கட்சியின் 32 ஆவது தேசிய பொதுப்பேரவை மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் வரவேற்புரையாற்றி ய போது மோகன் இந்த கோரிக்கையை தேசிய முன்னணியிடம் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணி தலைமை செயலாளர் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles