சகோதர தன்மையை வலுப்படுத்தும் தேசிய முன்னணி மற்றும் ஐபிஎப்! டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் பெருமிதம்

பாங்கி, டிச 15-
தேசிய முன்னணியுடன் சகோதர தன்மையை வெளிப்படுத்தும் ஐபிப் கட்சி மிகவும் பாராட்டுக்குரியது என்று தேசிய முன்னணி தலைமை செயலாளர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

டத்தோ லோகநாதன் தலைமையில் ஐபிஎப் கட்சி தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது.

தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை ஐபிஎப் வழங்கி வருகிறது.

மறைந்த முன்னாள் ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ எம் சம்பந்தன் அவர்கள் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு நெருங்கிய நண்பர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசிய முன்னணிக்கு ஐபிஎப் முழு ஆதரவை வழங்கி வருகிறது.

மேலும் சகோதர தன்மையை வலுப்படுத்தும் தேசிய முன்னணி மற்றும் ஐபிஎப் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று பாங்கி அவென்யூ மண்டபத்தில் ஜபிஎப் கட்சியின் 32 ஆவது தேசிய பொதுப்பேரவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுப் பேரவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கிம்மா கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ நல்லகருப்பன் , டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோகான் மற்றும் தேசிய முன்னணி உறுப்பு கட்சியின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles