


பாங்கி, டிச 15-
தேசிய முன்னணிக்கு மிகவும் விசுவாசமான கட்சியாக ஐபிஎப் விளங்குகிறது.
அந்த வகையில் ஐபிஎப் கட்சியின் விசுவாசத்தை தேசிய முன்னணி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் கேட்டுக் கொண்டார்.
கடந்த 34 ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை ஐபிஎப் வழங்கி வருகிறது.
ஜபிஎப் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தேசிய முன்னணிக்கு எங்களின் வற்றாத ஆதரவு தொடரும் என்று அவர் சொன்னார்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
இன்று பாங்கி அவென்யூ மண்டபத்தில் ஜபிஎப் கட்சியின் 32 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கை உரையாற்றிய போது டத்தோ லோகநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான பேராளர்கள் கலந்து கொண்ட ஐபிஎப் தேசிய பேராளர் மாநாட்டை
தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

