வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தம்பூன் தொகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன!

உலுகிந்தா, டிச 16-
தம்புன் நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி சகோதரர் முகமட் ஹைருல் அமீர் சப்ரி மற்றும் அவரது குழுவினர் நேற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கினர்.

இந்த நாடாளுமன்றத்தில் நான்கு கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்த 19 குடும்பங்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பாக நன்கொடையை வழங்கினர்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் விவகாரங்களும் எளிதாக்கப்படவும், இந்த உதவி பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கும் என்று பெரிதும் நம்புகிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அரபாட் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமரின் சார்பில் நன்கொடை வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles