ஈப்போ வுக்கு வருகை புரிந்த டத்தோஸ்ரீ அன்வாருக்கு உற்சாக வரவேற்பு

பிரதமராக பதவி ஏற்ற பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முதல் முறையாக ஈப்போ வந்தடைந்தார்.

ஈப்போ விமான நிலையத்தில் வந்திறங்கிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மற்றும் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ முகமட் சராணி வரவேற்றனர்.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன், உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் அரபாட், ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் கா கோர் மிங் ஆகியோரும் பிரதமரை வரவேற்று மகிழ்ந்தனர்.

தன்னை அமோக வெற்றி பெற செய்த தம்பூன் தொகுதி மக்களையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் சந்திக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles