
மஞ்சோங், டிச.18-
இங்குள்ள டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் இரண்டாவது ஆண்டாக காற்பந்து விளையாடி வரும் இளையோர்களை சிறப்பித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி தன்முனைப்பு வழங்கிய இச்சங்கத்தின் தலைவர் எம்.மகாலிங்கம் மற்றும் அவர் தம் நிர்வாக குழுவினருக்கு நன்றியை பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார் மலேசிய காற்பந்து சங்கத்தின் பயிற்சியாளரும், ஆசிரியருமான அ. புகழேந்தி.
ஓர் இந்திய இயக்கம் இம்மாதிரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டால் இந்திய மாணவர்களை விளையாட்டுத்துறையில் மாநில, தேசிய மற்றும் அனைத்துலக ரீதியில் கொண்டு சேர்க்க முடியும்.
கடந்த இரு வருடங்களாக வருட இறுதியில் 6 வயது முதல் 16 வயது சிறார்கள் வரை காற்பந்து அகடாமி வாயிலாக ஒவ்வொரு ்வார இறுதியில் பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் குறிப்பாக இங்குள்ள இந்திய பெற்றோர்களுக்கு பாராட்டையும் ,வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்வோம்.
தங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் நன்கு உணர்ந்துக்கொண்டு அவர்கள் காற்பந்து விளையாட்டு த்துறையில் அனுமதி வழங்கிய பெற்றோர்களுக்கு நன்றி.
அத்துடன், தங்கள் பிள்ளைகள் பயிற்சியில் ஈடுபடும் போதும் அவர்களை சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறுவது சிறந்த பண்புநலனாகும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த டிண்டிங்ஸ் இந்தியர் சங்கம் இந்நாட்டிலுள்ள அனைத்து இந்திய இயக்கங்களுக்கு ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு அவர்களது மாவட்டத்தில் இந்தியர்களின் தேவைகளை அறிந்து இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் காற்பந்து விளையாட்டில் இந்திய சிறார்கள் வளர்ச்சி காண வேண்டும் என்று அனைத்து தேவைகளையும் செய்து வருகின்றனர்.
வெறுமனமே இல்லாமல் இந்திய இயக்கம் என்ற பெயரில் மானியத்தை குறிவைத்து இவர்கள் செயல்படவில்லை. இவர்களை போன்று மற்ற இந்திய இயக்கங்கள் செயல்பட்டால் மேலும் சிறப்பாகும் என்று புகழேந்தி கூறினார்.
இந்த டிண்டிங்ஸ் இந்திய சங்கத்தின் சிறார்கள் அடுத்தாண்டு சீனாவிற்கு சென்று அனைத்துலக ரீதியில் காற்பந்து விளையாட்டில் பங்கேற்கவுள்ளனர். பேராக் சீன ரிக்ரேஷன் கிளப் தலைமையில் இத்திட்டம் நடைபெறவுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்டபோது முன்னாள் அனைத்துலக காற்பந்து( பீஃபா) நடுவர் ஆர்.கிருஷ்ணன் கூறினார்.
விளையாட்டுத்துறையில் மிளிர வேண்டும் என்றால் முதலில் சுய கட்டொழுங்கு அவசியமாகும்.
அத்துடன், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிவுரையை பின்பற்றி செயல்பட வேண்டும்.
இம்மாதிரியான இந்திய இயக்கங்கள் இவ்வட்டார இந்திய மாணவர்கள் காற்பந்து விளையாட்டில் அனைத்தலக ரீதியில் கொண்டு செல்லும் பொருட்டு பயிற்சியாளர்களையும், விளையாட்டாளர்களையும் உருவாக்கி வருவதற்கு அரசாங்க துறையினர் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மித்ரா இவர்களை போன்ற இந்திய இயக்கங்களுக்கு உதவ முன்னுரிமை வழங்குங்கள்.
இயக்கங்கள் என்ற பெயரில் வெறுமனே இருக்கும் அல்லது பெயரளவில் செயல்படும் இயங்களுகளை ஓரங்கட்டிவிட்டு முறையாகவும், நேர்த்தியாகவும் செயல்படும் இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்கி உதவுமாறு அவர் பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
நிறைவுவிழாவில், காற்பந்து அகடாமியில் சிறப்பான அடைவுநிலை கொண்ட விளயாட்டாளர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
மதிய உணவுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.

