குழுவில் எங்களை இணைத்து கொள்ள மறுப்பதா? பாப்பா ராயுடுவுக்கு எதிராக ஐந்து தோட்ட பாட்டாளிகள் போலீசில் புகார்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு, டிச 18-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டுக்கு எதிராக பத்தாங் பெர்ஜுந்தையைச் சேர்ந்த ஐந்து தோட்டப் பாட்டாளிகள் இன்று போலீஸ் புகார் செய்தனர்.

மேரித் தோட்டம், புக்கிட் தாகார், நைகல் தோட்டம், சுங்கை திங்கி, மிஞாக் தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிக் குடும்பத்தினர் கோல குபு பாரு காவல் நிலையத்தில் பிற்பகல் 3:00 மணிக்கு திரண்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் தோட்டப்பாட்டாளிகளின் குடியிருப்பு பிரச்சினை கடந்த 40 ஆண்டுகளாக நீடித்தது.

வீடமைப்பு திட்டத்தில் இவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி களத்தில் இறங்கியது.

245 குடும்பங்களுக்கு விடுகட்ட 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டபோது, அது போதாது என்று போராட்டம் தொடர்ந்த நிலையில், பின்னர் 20 ஏக்கர் நிலம் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

அண்மையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் இந்த வீடமைப்பு திட்டம் தொடங்குவதற்கு ஏதுவாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இப்பொழுது வீடுகளை கட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இதைக் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து தோட்டங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில அரசில் இந்தியப் பிரதிநிதியாக இருக்கும் பாப்பா ராய்டு, இந்த ஐந்து தோட்டங்களின் பிரதிநிதிகளை அங்கீக்கரிக்க மறுப்பதுடன் அவர்களை நேரில் சந்திப்பதையும் தவிரத்துவிட்டார் என ஐந்து தோட்ட நடவடிக்கைக் குழுவின் சார்பில் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

தோட்ட பிரதிநிதிக் குழுவிற்குப் பதிலாக அரசியரல் சார்ந்தவர்களை பாப்பா ராய்டு நியமித்து உள்ளார்.

தோட்ட பாட்டாளிக்கு வீடுகள் கிடைக்க போராடியவர்கள் நாங்கள்.

கண்காணிப்பு குழுவில் ஒரு தோட்டத்தை பிரதிநிதித்து ஒருவர் இடம் பெற்றிருந்தார்.

ஆனால் இன்று நாங்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்.

இது தொடர்பாக அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

பாப்பா ராயுடு இது தொடர்பாக எங்களை அழைத்து பேச வேண்டும். கண்காணிப்பு குழுவில் எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார் கமலகண்ணன்.

இல்லையென்றால் இந்த விவகாரத்தை மந்திரி பெசார் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு அடிக்கால் நாட்டு விழாவின்போது அமைதி மறியலில் ஈடுபடுவோம் என்று ஐந்து தோட்டமக்களின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles