
டத்தின்ஸ்ரீ ரொஸ்மா மன்சூரின் நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் பலவகையான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது!இவ்விவகாரத்தில் நீதிபதியை அழைத்து எந்தவொரு ஆலோசனையும் நான் பிரதமராக இருந்து வழங்கவில்லை.
முன்னாள் பிரதமர்கள் இதனை செய்திருக்கலாம். நீதிபதியின் முடிவை நான் மதிப்பளிக்கிறேன் என்று இங்கு நடைபெற்ற மூத்த அரசியல்வாதியான ஜ செ கட்சியின் முன்னாள் தலைவரான டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்கின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவை தொடக்கி வைத்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.
இவ்விவகாரத்தை தேசிய வழக்கறிஞரின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். அவர் இவ்விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்தால் அவரின் அதிகாரத்திற்குட்பட்டதாகும் மற்றவர்களின் ஈடுபாடு இதில் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
சபாவின் ஆளுநராக துன் மூசா அமானை நியமனம் செய்தவர் மாட்சிமை தங்கிய பேர்ரசர். அவரின் நியமனத்திற்கு மதிப்பளிப்பது பிரமரின் கடமையாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் எந்தவொரு குறைபாடும் காணப்படவில்லை.
ஆனால், கடந்த 2020 ல் துன் மூசா அமானை விட்டவர் அன்றைய பிரதமர் டான்ஸ்ரீ மெகிதின் யாசின். நம் நாட்டின் சட்டவிதிகள் மற்றும் அதன் மாண்பை ஒரு பிரதமர் அறிந்தவர்.
இவ்விவகாரத்தில் அன்றைய பிரதமரின் செயல்பாடுதான் தவறாக அமைந்துள்ளது
ஆகையால், சபா ஆளுநராக மூசா அமான் பேரரசரின் ஆசியில் சிறந்த ஆட்சியை வழங்குவார் என்று அவர் நம்புவதாக தெரிவித்தார்.
இந்த நூல் வெளியீட்டு விழா இந்நாட்டின் மேம்பாட்டிற்கும் மக் ளின் உயர்விற்கு பாடுபட்ட டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்கை மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.கடந்த 1999 முதல் அவருடன் பயணித்து வருகிறேன்.
எனக்கு பிரச்சினை வந்துபோது குரல் கொடுத்த ஜீவனாக அவர் செயல்பட்டார் என்று அவரை நன்றி உணர்வுடன் பிரதமர் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய நீதித்துறை துணையமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய காலத்தில் எதிர்கட்சி தலைவர்களாக செயல்பட்ட பட்டு, டேவிட், கர்ப்பால் சிங் மற்றும் டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் போன்ற அரசியல் தலைவர்களை மறக்க முடியாது. அவர்கள் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என்று அவர் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் நூல் வெளியீடு செய்து அதனை பிரமுகர்களுக்கு எடு்த்து வழங்கினார்.
டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்கின் புதல்வர் லிம் குவான் எங் மற்றும் அவரது புதல்வி கலந்துக் கொண்டனர்.

