
புதிய அமைச்சரவையில் மனித வள அமைச்சர் பதவி ஜசெகவைச் சேர்ந்த சிவகுமாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள வேளையில் கெஅடிலான் சார்பில் யாருமே முழு அமைச்சராக நியமிக்கப்படாது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
இந்தியத் தலைவர்கள் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் டத்தோஸ்ரீ அன்வார் நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ள இந்திய சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கூடுதல் துணை அமைச்சர் பதவிகள், சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

