63 வயதிலும் தன்னம்பிக்கையோடு உழைக்கும் ராஜன்னாவுக்கு சைக்கிள் வழங்கி உதவி புரிந்தார் டாக்டர் சத்திய பிரகாஷ்!

உலு பெர்ணம், டிச 23

உலுசிலாங்கூர் சங்காட் ஆசா தோட்டத்தில் வசிப்பவர்தான் ராஜன்னா சுப்பிரமணியம். 63 வயதுடைய இவர், தினமும் வேலைக்கு செல்ல 6 கி.மீ நடந்தும் சில சமயங்களில் மற்றவர்களின் வாகனங்களில் உதவி கேட்டும் சென்று வருகிறார்.

ராஜன்னா எதிர்நோக்கும் சிரமத்தை கேட்டறிந்த உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் அவருக்கு புதிதாக ஒரு சைக்கிளை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

63 வயதிலும்  சுயமாக உழைத்துவரும் ராஜன்னாவின் தன்னம்மிக்கை மிகவும் பாராட்டுகுறியது என்றார் டாக்டர் சத்திய பிரகாஷ்.

தினமும் வேலைக்கு சென்றுவர சிரமத்தை எதிர்நோக்கும் எனக்கு வழங்கிய இந்த சைக்கிள் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற ராஜன்னா, தமக்கு உதவி புரிந்த டாக்டர் சத்திய பிரகாஷ் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நேற்று முன் தினம் உலு பெர்ணாமில் உள்ள தாமான் டானாவ் கெஅடிலான்  கிளைத்தலைவர் சுரேஷ் இல்லத்தில் டாக்டர் சத்திய பிரகாஷ் இந்த சைக்கிளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles