பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நல்விருந்து நிகழ்ச்சி – புரவலர்களும் ஆலோசகர்களும் சிறப்பிக்கப்பட்டனர்!!

ஈப்போ,டிச23: நனிச் சிறந்த செயல்பாடுகளோடும் நடவடிக்கைகளோடும் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் தலைமையில் இயங்கி வரும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நல்விருந்து நிகழ்வில் அச்சங்கத்தின் முன்னோடிகளான புரவலர்களும் ஆலோசகர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

அச்சங்கத்தின் புரவலர்களான வழக்கறிஞர் மதியழகன்,மருத்துவர் ஜெயபாலன்,மேனாள் தலைவர்கள் மதிப்புமிகு இராம.பெருமாள்,முனைவர் செ.மோகன்குமார் ஆகியோருடன் சங்கத்தின் தோற்றுநர்களில் ஒருவரும் நீண்டக்கால செயலாளராக திறன்பட இயங்கிவருமான சித
நாரயணன் மற்றும் ஆலோசகர் திருமதி.திலகவதி ஆகியோரின் சேவை,வழிகாட்டல் மற்றும் சங்கத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவுக்கூர்ந்து நன்றி சொல்லும் விதமான அவர்களுக்கு இச்சிறப்பு செய்யப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் வரவேற்ப்புரை ஆற்றிய சங்கத்தின் செயலாளர் மதிப்புமிகு முனியாண்டி அவர்கள் விருந்து நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை வரவேற்றத்தோடு சங்கத்தின் வரலாறு மற்றும் மேனாள் தலைவர்களின் சேவை,செயல்பாடு,சங்கத்தின் சொந்த கட்டிடம் குறித்தும் வெகுவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய சங்கத்தின் தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் மேனாள் தலைவர்கள்,புரவலர்கள்,ஆலோசர்களுக்கு நன்றி கூறியதோடு சங்கம் சரியான இலக்கில் சிறந்த செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல்களோடு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

தனது தலைமைத்துவத்தில் சிறந்த முன்னெடுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திட்டமிடும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதன் இலக்கை எட்ட ஒத்துழைப்பும் ஆதரவும் நல்ல புரிந்துணர்வும் கொண்ட செயலவையினர் உடன் இருப்பது சங்கத்தின் பெரும் பலமாக திகழ்வதாக கூறினார்.

இவ்விருந்து நிகழ்ச்சி சுமார் 3 வாரத்தில் ஏற்பாடு செய்ய்ப்பட்டு மிகவும் நேர்த்தியாகவும் திறன்படனும் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இவ்விருந்து நிகழ்ச்சி க்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தோற்றுநர்களில் ஒருவரும் சங்கத்தின் நீண்டக்கால செயலாளருமான திரு.சித.நாரயணன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி – சிதநா இலக்கியப் பரிசு திட்டம் போட்டி தொடர்பிலும் அறிவித்தார்.

மேலும்,பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அடுத்தாண்டு முதல் மேலும் சில ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருப்பதாகவும் அவை சரியான திட்டமிடலோடு மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,அடுத்தாண்டு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர் வாசகர் மாநாடு,சிறுகதை தொகுப்பு உட்பட இலக்கியப் போட்டிகளையும் முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் ஈப்போ மாநகர மன்ற உறுப்பினர்களான கவுன்சிலர் லாரன்ஸ்,கவுன்சிலர் சிவம் உட்பட பல்வேறு அமைப்பினர்களும் சேவையாளர்களும் சிறப்பு பிரமுகர்களாய் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பாக நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அன்மையில் இயற்கை ஏய்தி நவீன இலக்கியச் சிந்தனை சிற்பி கவிஞர் கோ.முனியாண்டியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் புதுக்கவிதை போட்டி நடத்த வழக்கறிஞர் மதியழகன் கோரிக்கை விடுத்ததோடு அப்போட்டிக்காக வெ.5000 வழங்குவதாகவும் அறிவித்தார்.

சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புரவலர்களான வழக்கறிஞர் மதியழகன்,மருத்துவர் ஜெயபாலன் ஆகியோரின் உரையோடு மேனாள் தலைவர் முனைவர் செ.மோகன்குமாரின் உரையும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles