இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிரான அவதூறுகளை நிறுத்துங்கள்!இல்லையேல் சட்ட நடவடிக்கை பாயும்!

கோலாலம்பூர் 24-
நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம் உணவக உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகிறது என இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிரான அவதூறுகளை பரப்பிவரும் தரப்பினர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் சட்ட நடவடிக்கை பாயும் என்று
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி எச்சரித்தார்.

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகிறது என்ற வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் அதனை சமூக ஊடகங்களின் பகிரிட்டு வருகின்றனர்.

உண்மையில் இந்த சம்பவம் மலேசியாவில் நடக்கவில்லை. அதுவும் இதுவொரு பழைய வீடியோவாகும்.

ஆனால் இந்த வீடியோவை பகிர்ந்து ஒரு சில பொறுப்பற்ற நபர்கள் இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக அவதூறுகளை ஏற்படுத்துகின்றனர்.

மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களும் சுகாதாரத் துறை, ஊராட்சி மன்றங்களின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகின்றன.

அவ்வளவு எளிதாக உணவுகளில் எதையாவது கலந்து விற்பனை செய்ய முடியாது.

ஆகவே இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும்.

அவதூறு பரப்பும் நபர்களின் கைப்பேசி எண் அடையாளம் காணப்பட்டுள்ளது. புலனக் குழுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதைப் பரப்புவதை தடுக்காமல் போனால் அட்மின் மீதும் புகார் அளிக்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பிரெஸ்மா தனது வழக்கறிஞர்களுடம் விவாதித்து வருவதாக டத்தோ ஜவஹர் அலி கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles