ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு வங்கதேச அரசு கடிதம்

டாக்கா: டிச 24- இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் வங்கதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஆன 77 வயதான ஹசீனா, மாணவர்கள் போராட்டங்களால் ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஹசீனா, அவரது மாஜி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles