தொழிலதிபரை மணம் புரிந்த பி.வி.சிந்து!

ஹைரதபாத், டிச 24-
உலக நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பிரபல தொழிலதிபரை மணம் புரிந்துள்ளார்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மின்டனில் இரண்டு முறை பதக்கங்களை வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து.

அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

பேட்மின்டனில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து அவரது வாழ்க்கையில் திருமணம் எனும் புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளார்.

29 வயதாகும் அவர் பிரபல தொழிலதிபரான வெங்கட தத்தா சாய் என்பவரை நேற்று மணம் முடித்துள்ளார்.

பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் உதய்பூரில் நடைபெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles