



செராஸ், டிச 26-
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
செராஸ் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஜோன் சூசை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செராஸ் கியூபெக்ஸ் குடியிருப்பு சங்கத்தின் தலைவர் டத்தோ சங்கிலி மூத்து, சிலாங்கூர் இந்தியர் கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் பி.சி. துரை, யாங் பெர்பஹியா முருகப்பிள்ளை, டிஎன்பி பாண்டு, டிஎன்பி மோகன், பாரதிதாசன், ரத்னமாலா, மல்லிகா, மனோ எஸ்பி, புஷ்பா ராணி
உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஜோன் சூசை பிள்ளைகளான ஜூலியா நாதன், லில்லி ரிச்சர்ட், மார்க்கிரேட் தேவன், சைமன்,தோமஸ் ஆகியோர் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

