ஒற்றுமை அரசாங்கம் சரியான திசையில் செல்லவில்லை என்றால் மீண்டும் ஒரு பொது தேர்தலை சந்திக்க வேண்டி வரும்!?

நடப்பு அரசியல் சூழ்நிலையை உற்று பார்க்கும் பொழுது நாடு மீண்டும் ஒரு பொது தேர்தலை சந்திக்க வேண்டிய சாத்திய கூறுகள் தென்படுவதாக சமூக ஆர்வாளரும் மற்றும் பொது சேவையாளருமான சந்திர சேகரன் ஆறுமுகம் ஆருடம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 15ஆவது பொது தேர்தல் நிலவரத்தை வைத்து பார்க்கும் போது எந்த ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் பக்கத்தான் ஹரப்பான் தனது வைரியான தேசிய முன்னனியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதை தூர நோக்குடன் பார்க்கும் போது இந்த கூட்டணி ஏற்புடையதாக தெரியவில்லை என முன்னால் பெக்கோ சட்டமன்ற வேட்பாளரான அவர் மேலும் விவரித்தார்.

ஒற்றுமை அரசாங்கம் சரியான திசையில் செல்லவில்லை என்றால் இந்த நெருக்கடியான சூழ்நிலையில்
நாட்டில் மீண்டும் ஒரு தேர்தலை நடத்தி பலமான ஒரு அரசாங்கம் அமைவதே சரியான தீர்வாக இருக்கும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles