
நடந்து முடிந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு 85 விடுக்காட்டு இந்தியர்கள் வாக்களித்து வெற்றிபெற செய்தனர்.
அப்படியிருக்கையில் கெஅடிலான் கட்சி சார்பில் ஏன் ஒரு இந்தியர் கூட அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி ஆவேசமாக கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜசெக சார்பில் 6 இந்தியர்களும் கெஅடிலான் சார்பில் 4 இந்தியர்களும் வெற்றி பெற்று உள்ளனர்.
ஜசெக சார்பில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கெஅடிலான் கட்சி சார்பில் யாருமே அமைச்சராக நியமிக்கப்படவில்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தியர்களின் ஆதரவு இல்லாமல் இந்த அளவுக்கு பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்க முடியாது என்று அவர் சுட்டி காட்டினார்.

