ஒரு அமைச்சரா , இரண்டு அமைச்சரா கேள்வி அல்ல?
இந்தியர்களின் உரிமைகளை டத்தோஸ்ரீ அன்வார் காக்க வேண்டும்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் ஒரே இந்தியருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது தொடர்பில் அன்வாருகக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தியா சமுதாயம் வாக்குகளை அள்ளிக் கொட்டியது.

ஆனால் அமைச்சரவையில் ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைக்கு கேள்வி ஒரு அமைச்சரா அல்லது இரண்டு அமைச்சரா அல்ல

காலங்காலமாக இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் அடையாளக் கார்டு, மெட்ரிகுலேஷன், தமிழ்பள்ளிகள் ஆவயங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்கள் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இந்திய சமுதாயத்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கைத்தூக்கி விடுவாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles