
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையில் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் மீது ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது..
இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் அமைச்சர் என்பதால் சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு இவரின் தலையில் சுமத்தப் பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய தொழில் துறைகள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு இவருக்கு உள்ளது.
உணவகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், செர்வீஸ் துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் எப்படி தீர்வு காண போகிறார் என்பதே பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

