
உலக கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கிண்ணத்தை பெற்று தந்து சாதனை படைத்தார்.
மரடோனா உலகக் கிண்ண போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.
இன்று அதிகாலையில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் உலக கிண்ணப் போட்டியில் 9 கோல்களை அவர் தொட்டார்.
உலக கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினாவின் வ கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களை அடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 9 கோல்களை அடித்து மெஸ்சி உள்ளார்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவைச் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

