
பாஸ் கட்சி ஆட்சிக்கு வருவதை ஜசெக தடுத்து நிறுத்துகிறது என்றும் பக்கத்தான் ஹரப்பான் ஒழுக்கம் இல்லாதது என்று மிகவும் மோசமாக குற்றச்சாட்டை முன் வைத்த பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் மீது போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இனவாதத்தை தூண்டும் வகையில் ஹாடி அவாங் தொடர்ந்து பேசி வருவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் புகார்களை செய்தது.
அந்த அடிப்படையில் செந்தூல் மாவட்ட போலீசார் அவர் மீது விசாரணை நடத்தினர் .

