முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு தலையை ஏற்றார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

விஸ்மா பெர்டானா புத்ராவில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத் தாங்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமை 28 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

மறுநாள் சனிக்கிழமை 28 அமைச்சர்களும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இன்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நாட்டின் எதிர்காலம், பொருளாதாரம் உட்பட பல விவகாரங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles