
தாம் பிரதமராக இருந்த போது 60,000 கோடி வெள்ளி செலவு செய்தது தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் பயப்படவில்லை என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று சவால் விடுத்தார்.
நோய்த்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவ செலவு செய்யப்பட்ட இந்த தொகை குறித்து முறையான கண்க்குகளை தேசிய பொருளாதார மன்றத்திடம் உள்ளது.
நான் ஊழல் அல்லது நிதி மோசடி செய்திருந்தால் தாராளமாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் சொன்னார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் 60,000 கோடி வெள்ளி செலவு செய்தது தொடர்பில் அவர் மீது முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

