நம்பிக்கை துரோகிகளை மக்கள் நிராகரித்தது விட்டார்கள்! இப்போது திருட்டுத்தனமாக ஆட்சி அமைக்க முயற்சி

2018 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்த நம்பிக்கை துரோகிகளை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

இப்போது திருட்டுத்தனமாக இதர கட்சிகளின் எம்பிக்களை கொண்டு ஆட்சியை அமைக்க முயல்கிறார்கள் என்று கெஅடிலான் தேசிய துணை தலைவரும் பொருளாதார அமைச்சருமான ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் அதிகார முறைகேடுகள் நிகழ்ந்தால் அதனை அம்பலப்படுத்த வேண்டும்.

நாட்டில் நிகழ்ந்த ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக எனக்கு எதிராக 15 முறை நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன

ஊழலுக்காக எனது தனிப்பட்ட இந்த சாதனையை பெரிக்கத்தான் நேஷனலால் முறியடிக்க முடியுமா என்று ரபிஸி ரம்லி சவால் விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles