

கடந்த 8 ஆண்டுகளாக மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் நலன் காக்க செயல்பட்டு வரும் மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் அவசர ஆண்டுக் கூட்டமும், தேர்தலும் எதிர்வரும் 28 டிசம்பர் 2022 தலைநகர் ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2022 / 2024 ஆண்டுக்கான நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தேர்தல் அதிகாரிகளான கிருஷ்ணமூர்த்தி, டேவிட் ராஜு தலைமையில் நடைப்பெற்றது.
தலைவர் பதவிக்கு நடப்பு தலைவர் கு. தேவேந்திரனை எதிர்த்து நம்பிக்கை இணைய ஊடகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி தயாளன் சண்முகம் போட்டியிடுகிறார்.
துணைத்தலைவர் பதவிக்கு மலேசிய நண்பன் செய்தி ஆசிரியர் பார்த்திபன் நாகராஜன் மற்றும் தமிழ் மலர் செய்தியாளர் கோபி கிருஷ்ணா போட்டியிடுகின்றனர்.
பொதுச் செயலாளர் பதவிக்கு தமிழ் லென்ஸ் ஆசிரியர் வெற்றி விக்டர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
துணைச் செயலாளர் பதவிக்கு மலேசிய நண்பனைச் சேர்ந்த செய்தியாளர் குணாளன் (ஆர் .குணா) மற்றும் செய்தியாளர் சங்கீதா ராமச்சந்திரன் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு நடப்பு பொருளாளர் கிறிஸ்ட் சின்னப்பன் போட்டியின்றி கிறிஸ்ட் ஏக மனதாகத் தேர்வு பெற்றார்.
இரண்டு செயலவை உறுப்பினர் பொறுப்புக்கு
தீபன் கிருஷ்ணன், ரவி முனியாண்டி ,
ஜீவராஜா, தர்வின் குமார் மற்றும் பி.மலையாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
149 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் இதுநாள் வரை அனைத்து தலைமைத்துவத்திலும் ஊடகவியலாளர் நலனைக் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

