இருவருக்கு சக்கரநாற்காலி வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர்!!

மாலிம் நாவார்,ஜன04: தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருவருக்கு அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சக்கரநாற்காலிகளை மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி வழங்கினார்.

மம்பாங் டி அவனை சேர்ந்த திரு.வெள்ளைச்சாமி மற்றும் கம்போங் ஆயீர் தாவார் திரு.அமாட் ஆகிய இருவரும் தங்களின் தேவைக்காக சட்டமன்ற உறுப்பினரிடன் கோரிக்கை வைத்த நிலையில் அதனை உடனடியாக நிறைவு செய்தார்.

மேலும்,தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளை தாம் தொடர்ந்து அணுக்கமாக கவனித்து அதனை செய்து வருவதாக கூறிய அவர் மக்களின் நலனில் தனது தனித்துவ கவனம் இருந்து கொண்டே இருக்கும் என்றார்.

அதுமட்டுமின்றி,உடல்நலம் சார்ந்த விழிப்புணர் மக்களிடையே இருத்தல் வேண்டும் என வலியுறுத்திய அவர் மருத்துவம் சார்ந்த மடானி அரசாங்கத்தின் உதவி திட்டங்களில் வாய்ப்புகளை பொது மக்கள் நன்கு பயன்படுத்தியும் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும்,சக்கரநாற்காலி வழங்கப்பட்ட இருவரும் தங்களின் தேவைகளுக்கு சிறிய அளவிலாவது பங்களிப்பு செய்து விட முடியும் என்றும் தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles