மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம்: போலீஸ் படைத் தலைவர் வேண்டுகோள்

கோலாலம்பூர்: ஜன 4-
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம் என்று
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாமன்னர் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான எந்த ஒரு பேரணியிலும் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்.

இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை, பொது அமைதி, பாதுகாப்பு குறித்த கவலைகளை தாம் இதை தெரிவிப்பதாக அவர் கூறினார்.

எந்தவொரு கட்சி நடத்தும் எந்தக் கூட்டத்திலும் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்.

நாட்டின் செழிப்பு, நல்லிணக்கத்தின் தூண்களான ருக்குன் நெகாராவின் கொள்கைகளை
குறிப்பாக அரசியலமைப்பின் கண்ணியத்தை எப்போதும் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles