
கோலாலம்பூர்: ஜன 4-
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து நஜிப் ஆதரவு பேரணியை அம்னோ ரத்து செய்கிறது என்று
அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ அஸ்ரப் வஜ்டி டாசுகி நேற்றிரவு அறிவித்தார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை நிலைநிறுத்தும் கொள்கையின் அடிப்படையிலும்,
தேசிய போலிஸ் படைத் தலைவரின் அறிவுறுத்தலின்படியும் அம்னோ இந்த பேரணியைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கிற்கு நீதி வழங்குவதில் மாமன்னரின் கருணை, அதிகாரத்தின் மீது கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அம்னோ தலைமையகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லாத போதிலும், தார்மீக ஆதரவை வழங்குவதற்கான உயர் அர்ப்பணிப்பை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அம்னோ நன்றியைத் தெரிவித்து கொள்கிறது என்று அவர் சொன்னார்.
பெர்னாமா

