
கோலாலம்பூர், ஜன 4-
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை மதித்து வரும் திங்கட்கிழமை 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிபிபி கட்சி பங்கேற்காது என்று பிபிபி கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 6ஆம் தேதி நடக்கும் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் ஆதரவாக பேரணியில் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டை பிபிபி கட்சி எடுத்துள்ளது.
PPP கட்சி நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் மகத்துவத்தை நம்புகிறது மற்றும் விசுவாசமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

