
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு, ஜன 4-
மலேசிய திருநாட்டில்
உள்ள இந்து ஆலயங்களையும் இயங்களையும் ஒருகுடையின் கீழ் இணைக்க வேண்டும் என்பது மஹிமாவின் முக்கிய நோக்கமாகும் என்று மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.
தற்போது மஹிமாவின் தலைவராக நான் பொறுப்பேற்றதில் இருந்து நாடு தழுவிய நிலையில் உள்ள ஆலய நிர்வாகங்கள், இந்து அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறேன்.
மஹிமாவை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
சமயம் மற்றும் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
இதனை அடிபடையாக கொண்டு சிறப்பு புளூபிரிண்ட் ஒன்று தயார் செய்யபடவுள்ளது.
இது இந்து சமயம், சமூக பிரச்சினைகளுக்கு தீரவு காண்பதற்கான வழிகாட்டலாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
இதற்கு முன் இதுபோன்ற புளூபிரிண்ட் தயார் செய்தது இல்லை என்று கோலா குபு பாருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று சந்திப்பு கூட்டத்திற்கு பின் டத்தோ சிவக்குமார் கூறினார்.
இக்கூட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து இந்து ஆலய, அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

