தமிழ்ப்பள்ளி தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி முத்திரை பதித்தது! அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பெருமிதம்

புத்ரா ஜெயா, ஜன 5

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந் சிங் டியோ தலைமையில் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தேசிய அளவில் நிலையில் நடைற்ற இந்நிகழ்ச்சிக்கு மனியமும் வழங்குவதாக அமைச்சர் கோபிந்த் சிங் அறிவித்தார்.

மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மல்டிமீடியா பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் மஸ்லிஸாம் சா உட், சன்வே பல்கலைக்கழக இணைவேந்தர் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இது ஒரு சிறந்த திட்டம் எனவும், இது போன்ற திட்டங்களுக்கு தாம் முழு ஆதரவு எப்போதும் இருக்கும் என்று தருவதாக கோபிந்த் சிங் கூறினார்.

நமது இந்திய சமுதாயம், தகவல் தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்ரா ஜெயா மல்டிமீடியா பல்கலைக்கழகம், கோலகிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், தமிழ் டெக். மை, மலேசிய தலைமையாசிரியர் மன்றம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்வு வெற்றி பெற ஆதரவு கரம் நீட்டின.

உலகம் நமது கைகளில். அதனை விவேகமாகப் பயன்படுத்த வேண்டும்.
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்திற்கு நாம் ஈடு கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் தகவல் தொழில் நுட்பப் பயன்பாடுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

கடந்த 15 வருடங்களாக தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில் நுட்ப சிறப்பு வகுப்புகளை திதியன் டிஜிட்டல் திட்டம் முன்னெடுத்து வருகிறது.நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஈராயிரத்திற்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர்.

இவர்களுள் 240 மாணவர்கள் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி பரிசாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பள்ளியிலும், இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது இடைநிலைப்பள்ளியில் தடங்களின்றி கற்க வழிவகுக்கும். இதன் வழி நமது மாணவர்கள் 4ஆம் தொழில்புரட்சி சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என நிகழச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு குணசேகரன் கந்தசுவாமி தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் திட்டம் தடையின்றி செயல்பட தமக்கு ஆதரவு வழங்கும் நல்லுள்ளங்களுக்கு குணசேகரன் தனது நன்றியைப் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles