கூடுதல் உத்தரவு விவகாரத்தில் உள்துறை அமைச்சு சட்டதிட்டங்களை பின்பற்றியது! அமைச்சர் பாமி பட்சில் அறிவிப்பு

புத்ரா ஜெயா, ஜன 7-

16ஆவது மாமன்னர் பிறப்பித்ததாகக் கூறப்பபடும் கூடுதல் உத்தரவை உள்துறை அமைச்சு முறையாக பின்பற்றி உள்ளது.

இந்த உத்தரவை உள்துறை அமைச்சு முறையாக பின்பற்றவில்லை
என்று வெளிவந்த குற்றச்சாட்டைத் தகவல் தொடர்பு அமைச்சர் பாமி ஃபாட்சில் இன்று மறுத்துள்ளார்.

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உள்துறை அமைச்சு நடைமுறைப்படி செயல்பட்டதாக அவர் சொன்னார்.

எந்த ஆவணங்கள் பெறப்பட்டாலும், அவை சட்டத்தின் அடிப்படையில் செயல் படுத்தப்படுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 42ஆவது பிரிவின் அடிப்படையில் மன்னிப்பு வாரியத்தின் நடவடிக்கைகளில் இருந்து உத்தரவு தொடர்பான எந்தவொரு விஷயமும் வருகிறது.

எனவே விரிவான விஷயங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

அதை நாங்கள் செயல்முறைக்கு விடுகிறோம் என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles