
கோலாலம்பூர்: ஜன 8-
தம்மீதான 1 எம்டிபி மோசடி குற்றச்சாட்டுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில்,
நான் எதிர்கொள்ளும் 2.3 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
தேசிய சட்டத் துறை அலுவலகம் என்னையும் என் குடும்பத்தையும் பாதித்த குற்றச்சாட்டுகள் பற்றிய விரிவான மறுஆய்வை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நஜிப் வலியுறுத்தினார்.

